| ADDED : ஜூலை 04, 2024 03:40 AM
புதுச்சேரி மக்கள் பிரச்னைகளை தீர்க்க முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என, வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்தார்.புதுச்சேரி லோக்சபா தேர்தல் வெற்றியை அடுத்து முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவித்தார்.அப்போது அவர், கூறியதாவது:நீட் தேர்வு, மணிப்பூர் சம்பவம், அயோத்தி ராமர் கோவில் ஊழல் என எதற்கும் பிரதமர் மோடி பதில் கூறாமல் அடாவடி தனமாக பேசுகிறார். காங்., 50ல் இருந்து 100 எம்.பி., வந்துள்ளோம். பா.ஜ., 340ல் இருந்து 240க்கு வந்துள்ளது. ஹரியானா, குஜராத்தில் அதிளவில் நீட் முறைகேடு நடந்துள்ளது. பீகாரில் ரூ.35 முதல் ரூ.40 லட்சம் வரை கேள்வித்தாள் விலை போயுள்ளன.நாங்கள் இந்துக்களை அவமதிக்கவில்லை. இங்கு இருக்கும் எல்லோருமே இந்துக்கள் தான். ராகுல் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி சரியில்லை என, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றுள்ளனர்.ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி காங்., சார்பில் முதல்வரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரியில் சாராயக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை லியுறுத்தவுள்ளோம்.புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அக்கட்சியின் பிரச்னை. முதல்வர் ரங்கசாமி மீதான குற்றச்சாட்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை. ஆட்சி மாற்றம் என்பது குறித்து காங்., சிந்திக்கவேயில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்கவே முதல்வரை சந்திக்கிறோம்' என்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, செயலாளர் சூசைராஜ், முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.