உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் வாட்டி வதைக்கும் வெயில் சிக்னல்களில் பந்தல் அமைக்க அனுமதி தரப்படுமா?

புதுச்சேரியில் வாட்டி வதைக்கும் வெயில் சிக்னல்களில் பந்தல் அமைக்க அனுமதி தரப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், சிக்னல்களில் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.புதுச்சேரியில் வழக்கமாக ஏப்., மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு கடந்த பிப்., மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது. கடந்த 20 நாட்களாக கடும் வெயில் பதிவானதுடன் வெப்ப காற்றும் வீசி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப் பதிவு சதவீதம் குறைய, வெயிலும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று வெயிலின் அளவு 98.2 டிகிரியாக இருந்தது. கடும் அனல் வீசும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி துவங்கி, 29 வரை இருக்கும். அக்னி வெயில் துவக்கத்திற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.வழக்கமாக வெயில் காலங்களில் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் நலனுக்காக இந்திரா சிக்னல், நெல்லித்தோப்பு, பழைய பஸ் நிலையம், ராஜா தியேட்டர் சிக்னல்களில் அரசியல் கட்சி தலைவர்கள் நிழல் பந்தல் அமைப்பர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிழல் பந்தல் அமைக்க சிக்னல்களில் மரக்கம்புகள் நடப்பட்டது.தேர்தல் அறிவிப்பு வெளியானதால்நிழல் பந்தல்கள் பணிக்குதேர்தல் துறை தடை விதித்தது. இதனால் சிக்னலில் நிழல்பந்தல் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், சிக்னல்களில் நிழல்பந்தல் அமைக்க அனுமதி தர வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை