| ADDED : மார் 29, 2024 04:42 AM
புதுச்சேரி: கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் உலக வானிலை தினம்கொண்டாப்பட்டது.ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் காலநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள், சமூகத்தில் அவற்றின் தாக்கங்கள் புரிந்து கொள்வதில் வானிலை ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மட்டில்டா ஆகியோர் கருத்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக தேர்வு துறை அதிகாரி புகழேந்திரன் கலந்து கொண்டு, மாணவர்களின் வானிலை ஆய்வின் உலகத்தை ஆராய மாணவர்களை ஊக்குவித்து, காலநிலை மாறுபாடு, வானிலை முன் அறிவிப்பு நுட்பங்கள், வானிலை ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரியங்கா, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.