உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி

சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காலாப்பட்டு மத்திய சிறையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரவிந்தர் சொசைட்டி மற்றும் ஈஷா யோகா சார்பில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. சிறை துறை ஐ.ஜி. ரவிதீப்சிங்சாகர் பரிந்துரையின்பேரில் நடந்த யோகா பயிற்சிக்கு, தலைமை கண்காணிப்பாளர் அழகேசன் தலைமை தாங்கினார்.சிறை கைதிகள் பல்வேறு யோகா செயல்விளக்கங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் சிறை காவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ