உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்பு அகற்றிய மறு நாளே மீண்டும் முளைத்த இளநீர் கடைகள்

ஆக்கிரமிப்பு அகற்றிய மறு நாளே மீண்டும் முளைத்த இளநீர் கடைகள்

புதுச்சேரி: காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றிய அடுத்த நாளே மீண்டும் அதே இடத்திற்கு வந்த இளநீர் கடைகளால் தினசரி போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது.புதுச்சேரி நகர வீதி நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்து உள்ளாட்சித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், புதுச்சேரி நகராட்சி கடந்த வாரம் காந்தி வீதியில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற எச்சரிக்கை விடுத்தது. கடந்த 21ம் தேதி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள், காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அப்போது, காந்தி வீதி, காமாட்சியம்மன் கோவில் சந்திப்பு அருகில் சாலையில் பல அடி துாரத்திற்கு ஆக்கிரமித்து இளநீர் கொட்டி வியாபாரம் செய்தவர்கள், தங்கள் கடைகளை அகற்றி கொண்டனர்.ஆனால் அடுத்த நாளே மீண்டும் அதே இடத்தில் இளநீர் கடைகள் வந்தன. வழக்கம்போல் சாலையில் பல அடி துாரத்திற்கு இளநீர் கொட்டி வியாபாரம் செய்ய துவங்கி விட்டனர். இளநீர் வாங்க வருவோர் சாலையில் வாகனங்களை நிறுத்தி இளநீர் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த காந்தி வீதியில் இளநீர் விற்பதால் இவ்வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கின்றனர். இந்த வழியாக நகராட்சி ஊழியர்கள் கடந்து சென்றும் கண்டு கொள்ளாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ