உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்காலில் 10.29 செ.மீ., மழை

 காரைக்காலில் 10.29 செ.மீ., மழை

காரைக்கால்: காரைக்காலில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று 10.29 செ.மீ., மழை பதிவானது. 'டிட்வா' புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பொய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை 10.29 செ.மீ., மழை பொய்தது. இதனால் பிரதான சாலையான புதிய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மழை நீரில் மூழ்கின. இவ்வழியாக வாகன ஓட்டிகள் மழையில் கடும் சிரமத்துடன் செல்லவேண்டி இருந்தது. ஓரிரு இடங்களில் வாகனங்கள் பழுதடைந்து நின்றன. இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட நெடுங்காடு தொகுதி மக்களுக்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., உணவு ஏற்பாடு செய்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி