| ADDED : ஜன 09, 2024 07:28 AM
திருபுவனை : திருபுவனையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையில் போலீசார் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.திருவண்டார்கோவில் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னல் சத்யா நகர், 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த ஜோசப் மகன் ஆனந்தன், 25; சரவணன் மகன் அருள் (எ) அன்புசெழியன் ,24; திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பூந்தோப்பு வீதி அப்துல் மகன் முகமதுஅர்ஷத், 34, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.கல்லுாரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூவரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.