உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 9 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

9 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி : பல்வேறு துறைகளை கவனித்து வந்த 9 பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி தொழிலாளர் துணை ஆணையர் ராகினி, சமூக நலத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிப்டிக் மேலாண் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.நிதித் துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், புதுச்சேரி வடக்கு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த துணை கலெக்டர் கந்தசாமி, புதுச்சேரி நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு புதுச்சேரி மாவட்ட பதிவாளர் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நிதித் துறை சார்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாட்கோ மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாகி நகராட்சி ஆணையர் பாஸ்கரன், புதுச்சேரி தேர்தல் துறை சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பி.ஆர்.டி.சி., துணை போக்குவரத்து ஆணையர் சந்திரகுமரன், தொழிலாளர் துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பி.ஆர்.டி.சி., துணை போக்குவரத்து ஆணையர் பொறுப்பினை கூடுதல் பணியாக தொடருவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மின்துறை, துறைமுகம், ஆதிதிராவிடர் நலத் துறைகளை கவனித்து வந்த சார்பு செயலர் முருகேசன், சுகாதாரம், துறைமுக துறைகளின் சார்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த மின் துறை, ஆதிராவிடர் நலத் துறை பொறுப்புகள் சார்பு செயலர் கந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சமூக நலத்துறை குமரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, துணை போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பி.ஆர்.டி.சி., நிர்வாக மேலாண் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்த்திருத்த துறை அரசு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை