| ADDED : மார் 08, 2024 06:51 AM
அரியாங்குப்பம் : புதுச்சேரி, நெல்லித்தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 2011ம் ஆண்டு, நுாறடி சாலை அருகே உள்ள உழந்தைகீரப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முதலியார்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி, 38; என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் குற்றவாளி என கடந்த 2018ம் ஆண்டு கோர்ட் உறுதிப்படுத்தியது. தமிழ்மணி கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவரை பிடிக்க கோர்ட், பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.தலைமறைவாக இருந்த அவரை, முதலியார்பேட்டை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், தமிழக பகுதியான திருப்பூரில் அவர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் 6 ஆண்டுக்கு பின்னர் அவரை திருப்பூரில் கைது செய்தனர்.இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கொலை, திருட்டு வழக்குகளில் அவரை தனிப்படை போலீசார் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தமிழ்மணியை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.