உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் நடிகர் கமல்ஹாசன் உறுதி

புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் நடிகர் கமல்ஹாசன் உறுதி

புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் நீதி மைய நிர்வாகிகளிடம் கட்சி தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.லோக்சபா தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில மக்கள் நீதி மைய மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் பொது செயலாளர் முருகேசன்,மாநில செயலாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம், லோக்சபா தேர்தலை சந்திப்பது குறித்தும்,கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.புதிய வாக்காளர்களை கவரும் வகையில் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும்,இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் கட்சியில் இணைக்க வேண்டும்.லோக்சபா தேர்தலில் கட்சிக்கென பெரிய அளவில் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும் என்று கமல்ஹாசன் ஆலோசனை வழங்கினார்.இறுதியாக பேசிய கட்சி தலைவர் கமல்ஹாசன், விரைவில் புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் வர இருப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ