உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இலவச அரிசி திட்டம் முழுவதும் தோல்வி அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

 இலவச அரிசி திட்டம் முழுவதும் தோல்வி அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: தேர்தல் துறை வாக்காளர் திருத்தப்பணி படிவத்தை திரும்ப பெறும் காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது: இலவச அரிசி வழங்கும் திட்டம் ஒரு உன்னதமான திட்டம். மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 118 ரேஷன்கார்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 622 சிகப்பு நிற குடும்ப அட்டைக்கு 20 கிலோவும், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 496 மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசியும் என மாதந்தோறும் 5150 டன் அரிசி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதத்திற்கு 22.66 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 271.92 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. ஆனால் காலத்தோடு உரிய நேரத்தில் அரசி வழங்கப்படாததால் மக்களுக்கு அது பயனற்றதாக உள்ளது. அரிசியும்தரமற்றதாக இருப்பதால் மக்கள் அரிசியை கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு வெளியே விற்றுவிடுகின்றனர். . இலவச அரிசி என்றாலே எழுதப்படாத ஊழல் என்ற நிலை உள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியும் தரமான அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அரிசி விநியோகம் செய்வதைவிட சிவப்பு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாயும், மஞ்சள் நிற ரேஷன்கார்டுக்கு 500 ரூபாயும் அரசு பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இலவச அரிசி வழங்கும் திட்டம் முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் துறை வாக்காளர் திருத்தப் பணி படிவத்தை திரும்ப பெறும் காலக்கெடுவை நீடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை