உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லஞ்சம் பெற்று கொண்டு பேனர் வைக்க அனுமதி அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

லஞ்சம் பெற்று கொண்டு பேனர் வைக்க அனுமதி அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: 'பேனர் தடை சட்டம் உள்ள நிலையில், சில துறைகளின் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தங்கள் துறை சார்ந்த இடங்களில் வர்த்தக பேனர் வைப்பதிற்கு அனுமதி அளித்துள்ளனர் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டிற்கு முன்பு திறந்த வெளி விளம்பரங்கள் தடை செய்ய உரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை அமல் படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பல முறை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் பேனர் வைப்பது தடையின்றி நடக்கிறது. சட்டத்திற்கு விரோதமாக வைக்கப்படும் பேனர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே போலீஸ் கடமையாக உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி தலைமை நீதிபதி நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, மாவட்ட கலெக்டர், போலீஸ், வருவாயத்துறை, பொதுப்பணித்துறை ஆகியோர் பேனர் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத்து பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதியின் கருத்தை கேட்டு அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பேனர்களும் எடுக்கப்பட்டுள்ளது. பேனர் தடை சட்டம் உள்ள நிலையில் சில துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தங்கள் துறை சார்ந்த இடங்களில் வர்த்தக பேனர் வைப்பதிற்கு அனுமதி அளித்துள்ளனர். அனுமதி அளிக்கும் எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்கள் யாராக இருந்தாலும், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் முழுதும் பேனர் கலாசாரத்தை தடுத்து நிறுத்த கலெக்டர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவன தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் ஆகியோரின் கூட்டத்தை கூட்டி பேனர் வைப்பது தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை