உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிய கயிறு இழுக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுச்சேரி வீரர்

ஆசிய கயிறு இழுக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுச்சேரி வீரர்

புதுச்சேரி: ஆசிய கயிறு இழுக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரரை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். மலேசியாவில் கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய அணியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் வெங்கடேசன், அஜய், பிரசாந்த், குருபிரசாத் மற்றும் வீராங்கனை ஜெயக்குமாரி ஆகியோர் பங்கேற்றனர். மலேசியாவில் நடந்த இறுதி போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கமும், 23 வயதிற்கு உட்பட்ட இருபாலர் அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தது. தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற புதுச்சேரி வீரர் குருபிரசாத் மற்றும் சக வீரர்கள் நேற்று புதுச்சேரி மாநில கயிறு இழுக்கம் சங்க தலைவர் சிவா முன்னிலையில், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், சங்க செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பாரதி, பயிற்சியாளர்கள் நந்தகோபால், பார்த்திபன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை