உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் அலுவலகத்தில் வரும் 18ம் தேதி பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சிறப்பு கவுன்சிலிங்

சென்டாக் அலுவலகத்தில் வரும் 18ம் தேதி பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சிறப்பு கவுன்சிலிங்

புதுச்சேரி: பி.டெக்., இரண்டாம் ஆண்டு  சேர்க்கைக்கான (லேட்ரல்) நேரடி சிறப்புக் கலந்தாய்வு வரும் 18ம் தேதி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கும் சென்டாக் அலுவலகத்தில் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த சென்டாக்கில் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கும், காலை 11:30 மணிக்கு புதுச்சேரியை சேர்ந்த பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கும், மதியம் 2:30 மணிக்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே பிற மாநில விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்குப் பரிசீலிக்கப்படுவர். காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் நேரடியாகச் சென்டாக் அலுவலகத்திற்கு வரலாம் அல்லது கூகுள் மீட் இணையவழி இணைப்பு மூலமாகவும் காலை 10:45 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க தகுதியாக, புதுச்சேரி பொதுப்பிரிவு மற்றும் பிற மாநில மாணவர்கள் டிப்ளமோவில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்களும், புதுச்சேரி ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மீனவர், முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது தகுதி மதிப்பெண்களைச் சென்டாக் இணையதள லாக்-இன்  மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும் முன் காலிப்பணியிடங்கள் மற்றும் இடங்களின் விவரங்களைச் சென்டாக் இணையதளத்தில் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏற்கனவே சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்குப் பாடப்பிரிவு அல்லது கல்லுாரி மாற அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்கள் தங்களுக்கான நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே சென்டாக் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், விண்ணப்பப் படிவத்தின் நகல், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அசல் ஆவணங்களைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது சென்டாக் இணையதளத்தின் குறைகேட்பு பகுதி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்