| ADDED : பிப் 14, 2024 03:37 AM
புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் ஆட்டோ மூலம் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.புதுச்சேரி நலவழித்துறை, தேசிய பூச்சுகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மற்றும் கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நேற்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி சித்ரா துண்டு பிரசுரத்தை, பொதுமக்களிடம் வழங்கி துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, ஆட்டோ மூலம், கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சி பேட்டை, சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், சோனியா காந்தி நகர், காமராஜ் நகர், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் உள்ளிட்ட பகுதிகளில், சுகாதார உதவியாளர் சிவக்குமார், ஜெகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.