உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம்; புனித தீர்த்தம் நாளை புதுச்சேரி வருகை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம்; புனித தீர்த்தம் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு புனித தீர்த்தம் மற்றும் புனித மண் அடங்கிய பேழை நாளை புதுச்சேரிக்கு வருகிறது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, புண்ணிய நதி தீர்த்தங்கள், புண்ணிய பூமி மண் அடங்கிய பேழையும், ராமர் விக்ரகம் மற்றும் பாதுகையும் நாடு முழுதும் எடுத்து சென்று மக்களின் கைகளால், பூஜை செய்வதற்கு, ராமாம்ருத தரங்கிணி டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.இந்த பேழை ஊர்வலத்தை, சிருங்கேரி சாரதா பீடம் தஷினாம்நாய சுவாமிகள் துவக்கி வைத்தார். நாளை 6ம் தேதி காலை 7:30 மணிக்கு புதுச்சேரி வரும் பேழைக்கு, லாஸ்பேட்டை, சிவாஜி சிலை அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது.பஜனை மற்றும் வேத முழக்கங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று வேதாஸ்ரம குருகுலத்தில் சிறப்பு பூஜை காலை 8:30 முதல் 9:30 மணி வரை நடக்கிறது.இந்த பேழையை தரிசிக்க, புதுச்சேரி வேதபாரதி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், விபரங்களுக்கு 9443337023, 9486365817, ரமேஷ், சர்மா ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை