உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை

வில்லியனுார் : புதுச்சேரி பொதுப்பணித் துறை சார்பில், 1.86 கோடி ரூபாயில் திருக்காஞ்சி உட்பட இரண்டு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை வேளாண் அமைச்சர் துவக்கி வைத்தார்.புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில், 1:86 கோடி ரூபாயில் திருக்காஞ்சி, கீழ்அக்ரஹாரம் கிராமம் முதல் அபிேஷகபாக்கம் மெயின்ரோடு வரை, உறுவையாறு ஆச்சார்யாபுரம் முதல் ஓம் கணபதி நகர் வரை கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட உதவி பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ