உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல் 

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல் 

புதுச்சேரி: ஏனாம், கிரியம்பேட்டா காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கி, 73- மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட்டுகளை வழங்கினார். பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கேன்டீனை திறந்து வைத்தார். அவர், பேசுகையில், ‘வரும் நவம்பர் 14-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்’ என்றார். பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை