உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.முத்தியால்பேட்டை, காந்தி வீதி, தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில்பிரம்மோற்சவ விழா, கடந்த, 5ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.காலை 7:00 மணிக்கு, சுவாமி, தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. விழாவில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., சிறப்பு அதிகாரி பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதியம் 2:30 மணிக்கு, தேர், கோவில் நிலையை வந்தடைந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமி மற்றும்தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்றுகாலை 10:00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை