உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி: புதிய நீதிபதிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த 9 வழக்கறிஞர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 6 வழக்கறிஞர்கள் என, மொத்தம் 15 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று வழங்கினார். புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக 9 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கிராமப்புறங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கிறது என, முதல்வர் பாராட்டினார். சபாநாயகர் செல்வம், சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டத் துறை சார்புச் செயலர் ஜான்சி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ