உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழிபாட்டு தலங்களில் துாய்மை பணி

வழிபாட்டு தலங்களில் துாய்மை பணி

புதுச்சேரி : புதுச்சேரியில் 163 கோவில், 9 சர்ச், 16 மசூதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் துாய்மை செய்யும் பொருட்டு, ஸ்வச் தீர்த் என்ற இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 163 கோவில், 9 சர்ச், 16 மசூதிகள் துாய்மைப் படுத்தப்பட்டன. இப்பணியை உள்ளாட்சித்துறைகளில் உள்ள அனைத்து அமைப்புகளுடன், அறநிலைத்துறை இணைந்து செயல்படுத்தியது.இதில் முக்கிய தலங்களான மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குரு சித்தானந்தா கோவில், திருகாமீஸ்வரர் கோவில், ஜென்ம ராக்கினி தேவாலயம், ஜிம்மா மசூதி உட்பட பல வழிபாட்டு தளங்கள் துாய்மை படுத்தப்பட்டன.இப்பணியில் கவர்னர் தமிழிசை, சபாநாயகர் செல்வம், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்