மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
பாகூர் : முள்ளோடையில் மதுபான கடை அமைக்க உரிமம் வழங்கிய கலால் துறை ஆணையரை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடை- மதிக்கிருஷ்ணாபுரம் சாலையில் புதிய மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, வழிபாட்டு தலம் அங்கு இருப்பதால், அப்பகுதி மக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கடந்த 28ம் தேதி முள்ளோடை சந்திப்பில் அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில், மதுபான கடையை அப்புறப்படுத்திடவேண்டும். மது பான கடை திறக்க உரிமம் அளித்த கலால் துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், மதிக்கிருஷ்ணாபுரம், கொரவள்ளிமேடு, சுள்ளியங்குப்பம், வண்ணான்குளம், மூர்த்திகுப்பம், புதுகுப்பம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago