| ADDED : டிச 04, 2025 05:11 AM
புதுச்சேரி: பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டிக்கான அரையிறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி, மகாத்மா காந்தி சாலையில் உள்ள பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா விருது போட்டிக்கான அரையிறுதி சுற்று நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இந்த வினாடி வினா போட்டியில், பிளஸ் 1 மாணவர்கள் ஹரிஷ், பால பிரசாத் முதலிடத்தையும், பிளஸ் 1 மாணவர்கள் சர்வேஷ்ராஜா, ஸ்ரீ கரும்பாயிரம் 2ம் இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து,பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளி முதல்வர் தேவதாஸ் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.வேதியியல் துறைத் தலைவர் பீட்டர் ஜார்ஜ், ஆசிரியர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.