உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தினமலர் மெகா கோலப்போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது

 தினமலர் மெகா கோலப்போட்டி புதுச்சேரியில் இன்று நடக்கிறது

புதுச்சேரி: தினமலர் நாளிதழ், சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தும் மெகா கோலப்போட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று (28ம் தேதி) நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக, 'தினமலர்' நாளிதழ், மெகா கோலப்போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி சுற்றுலாத்துறை, 'சூப்பர் ருசி பால்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மெகா கோலப் போட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று (28ம் தேதி) நடக்கிறது. கோலப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விடியற்காலை 5:30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளாக போட்டி நடக்கிறது. போட்டியில் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கோலமிடுவதிற்கு ஒவ்வொரு நபருக்கும் 4 அடிக்கு 4 அடி இடம் ஒதுக்கப்படும். அந்த இடத்தில் மட்டுமே கோலமிட வேண்டும். கோலம் போட தேவையான பொருட்களை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். கோலமிட ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவரை உதவிக்கு அழைத்து வரலாம். கோலமிட வரும்போது, போன் மூலம் முன்பதிவு செய்து, தினமலர் நாளிதழில் வெளியான கூப்பனை பூர்த்தி செய்து கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா ஒரு ரெப்ரிஜிரேட்டர் வீதம்3 ரெப்ரிஜிரேட்டர் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பரிசாக வாஷிங் மிஷன், மூன்றாம் பரிசாக 'டிவி' வழங்கப்படவுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இன்றி, பங்கேற்கும் அனைவருக்கும், சிறப்பு தொகுப்பு பரிசு காத்திருக்கிறது. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க அதிகாலையிலேயே வாங்க ....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை