உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்

பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்

புதுச்சேரி: இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அடங்கிய பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது.இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும்30ம் தேதி புதுச்சேரி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மோசமான வானிலை சூழல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் செல்பி மோகத்தில் கடற்கரை செல்வதை தவிர்க்க வேண்டும். பலத்த காற்றுடன் கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால் இந்திய கடலோர காவல்படை போதுமான கடலோர காவல்படை வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ