உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணி தோல்வியை சந்திக்கும்: அன்பழகன்

 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணி தோல்வியை சந்திக்கும்: அன்பழகன்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உப்பளம் அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசியதாவது: கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தைக் கூட துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு இருந்து வருகிறது. அரசியல் சாசனத்தை அவமதிக்கும் முதல்வருக்கு, கோர்ட் சரியான பதிலடியை வழங்கி, மாநில அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு கால நேரத்தை கூற முடியாது என, தீர்ப்பு வழங்கியது வரவேற்கத் தக்கது. சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியில் (எஸ்.ஐ.ஆர்) பொதுமக்களுக்கு துணை நின்று விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகள் பூர்த்தி செய்ய வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள அரசு அமைந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பங்குபெறும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியில் அமரும். தி.மு.க., - காங்., தலைமையிலான இண்டி கூட்டணி தோல்வியை சந்திக்கும். தமிழகத்திலும் தி.மு.க., ஆட்சி துாக்கி எறியப்பட்டு, பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும்' என்றார். கூட்டத்தில், இணைச்செயலாளர் கணேசன், திருநாவுக்கரசு, நகர செயலாளர் அன்பழகன், சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை