உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் நியமனம்

 நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் நியமனம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 24 மணி நேரம் மருத்துவர் நியமித்து, சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நெட்டப்பாக்கம் தொகுதி ஏரிப்பாக்கம் காலனியில்தடுப்பூசி போட்ட 3 மாதம் பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதற்கு நியாயம் கேட்டும், நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரம் மருத்துவர் நியமித்து இயக்க கோரிக்கை வைத்து, குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் இரு தினங்களுக்கு முன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் துணை சபாநாயகர் ராஜவேலு பேச்சுவார்தை நடத்தி, மருத்துவமனையில் 24 மணி நேரம் மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுறுதி அளித்தார். அதன்படி துணை சபாநாயகர் ராஜவேலு சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேளை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். பின் துணை சபாநாயகர் ராஜவேலு, சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், துணை இயக்குனர் ஷமுனிஷா பேகம், துணை இயக்குனர் (தடுப்பூசி பிரிவு) உமாசங்கர் ஆகியோர் முன்னிலையில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். தொடர்ந்து துணை சபாநாயகர் வலியுறுத்தலின் பேரில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 8:00 மணி முதல் 2:00மணி வரை 2 மருத்துவர்,2:00 முதல் இரவு 8:00 மணி வரை ஒரு மருத்துவர், இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை ஒரு மருத்துவர் நியமித்து, மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை