உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் நன்னடத்தை விதிகள் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கம்

தேர்தல் நன்னடத்தை விதிகள் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கம்

புதுச்சேரி: தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் நன்னடத்தை விதிகள், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான விளக்கக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், தேர்தல் செலவினங்களை பராமரித்தல், குறித்த காலத்திற்குள் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்தல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டன.சப் கலெக்டர் யஷ்வந்த் மீனா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ், தேர்தல் நன்னடத்தை நோடல் அதிகாரி சிவக்குமார், செலவினக் கண்காணிப்பு நோடல் அதிகாரி ஜெகநாதன், தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை