உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் வாங்கிய தொழிற்சாலைகளுக்கு சமரச தீர்விற்கான காலக்கெடு நீட்டிப்பு

கடன் வாங்கிய தொழிற்சாலைகளுக்கு சமரச தீர்விற்கான காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி: பிப்டிக் நிறுவனத்தில் 80 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கியுள்ள தொழிற்சாலைகளுக்கான சமரச கடன் தீர்விற்கான காலக்கெடுமார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரிமாநிலத்தின் தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு கழகமான பிப்டிக் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, புதிதாக தொழில் துவங்கும் தொழிற்சாலைகளுக்கு கடனுதவியை அளித்து வருகிறது.அதன்படி, 25 லட்சம் வரையிலான முதலீடு கடன்களுக்கு 10 சதவீத வட்டியும், 25 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை 11 சதவீத வட்டியிலும், 50 லட்சத்திற்கு மேல் 12 சதவீத வட்டியிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டன.பிப்டிக் நிறுவனத்திடமிருந்து கடனுதவியை பெற்ற, தொழிற்சாலைகள் அதன் பிறகு அசல் கடன் தொகையும் முழுவதுமாக கட்டவில்லை. இதனால் பிப்டிக் நிறுவனத்திடமிருந்து பெற்ற அசலும் வட்டியும் சேர்த்து 80 கோடியாக எகிறியது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் வட்டி மூன்று மாதம் தொடர்ச்சியாக அசலையும், வட்டியும் கட்டாத நிறுவனங்கள் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்படும். அதன்படி புதுச்சேரியில் 60 தொழிற்சாலைகளின் கணக்கு செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்பட்டன.அதையடுத்து கடந்தாண்டு புதுச்சேரி அரசு செயல்படாத கணக்கு வைத்துள்ள தொழிற்சாலைகளுக்கு புது திட்டத்தை அறிவித்தது.அதன்படி அசல் தொகை கட்டி சேரும் நிறுவனங்களுக்கு கட்ட வேண்டிய மொத்த வட்டியில் 25 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து 25 சதவீத அசல் தொகையை கட்டி இத்திட்டத்தில் சேர்ந்தன.இந்நிறுவனங்களிடமிருந்து 13.5 கோடி அளவில் கடன் தொகை வசூலிக்கப்பட்டது. இருப்பினும் 16 கோடி ரூபாய் அளவிற்கு பல தொழிற்சாலைகள் இன்னும் கடன் தொகை செட்டில் செய்யவில்லை. இதனையடுத்து செயல்படாத கணக்கு வைத்துள்ள தொழிற்சாலைகள் வாங்கிய அசல் தொகையுடன், 25 சதவீத வட்டியுடன் கணக்கை முடிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதிவரை பிப்டிக் நிறுவனம் நீட்டித்துள்ளது.இது குறித்து பிப்டிக் அதிகாரிகள் கூறுகையில், 'வாங்கிய அசல் தொகையுடன் 25 சதவீத வட்டியை கட்டினால் போதும் சமரச கடன் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.இந்த வாய்ப்பினை கடன் வாங்கிய தொழிற்சாலைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை