| ADDED : ஜன 21, 2024 04:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு அல்லாத பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழக 1071 பிஎச்.டி., இடங்கள் உள்ளன. இந்த ஆராய்ச்சி படிப்பில் நுழைவு தேர்வு அடிப்படையிலும், நுழைவு தேர்வு இல்லாமலும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது.நுழைவு தேர்வு இல்லாத பிரிவில் பல்கலைக் கழகத்தில் 439 சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டன.நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு உயர் படிப்பிற்கு விண்ணப்பித்தனர். மாணவர் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை புதுச்சேரி பல்கலைக் கழகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.யூ.ஜி.சி., உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் ஜே.ஆர்.எப்., தகுதி பெற்ற மாணவர்கள் நுழைவு தேர்வு இல்லாத பி.எச்.டி., நேரடி மாணவர் சேர்க்கைக்கு https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.