உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி: பூச்சிகொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சிலுக்காரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா 43, தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி மாலை வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டு வீட்டில்  மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ