உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

புதுச்சேரி,: புதுச்சேரி, சண்முகாபுரம், மாணிக்கசெட்டியார் நகரை சேர்ந்தவர் கண்ணன் தணிகாசலம், 33; தனியார் கம்பெனியில் ஊழியர். இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேரம் வேலை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது. அதை நம்பி அவர், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி ஏமார்ந்தார்.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ