மேலும் செய்திகள்
செல்வகணபதி எம்.பி., பொதுமக்களுக்கு வாழ்த்து
7 minutes ago
கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
10 minutes ago
திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., மாணவிகள் தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தேர்வு செயயப்பட்டுள்ளனர். கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லூரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவை சேர்ந்த மாணவிகள் லோகேஸ்வரி, ஆர்த்தி ஆகியோர் வரும் 28ம் தேதி மத்தியபிரதேச மாநிலம், போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான 68வது துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வழி அனுப்பும் விழா நேற்று கல்லுாரியில் நடந்தது. கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்புச்செல்வன் துப்பாக்கி சுடும் போட்டிக்கு செல்லும் மாணவிகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் அன்பழகன் நன்றி கூறினார்.
7 minutes ago
10 minutes ago