உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிள்ளைச்சாவடி பள்ளியில் கைவினை பயிற்சி முகாம்

பிள்ளைச்சாவடி பள்ளியில் கைவினை பயிற்சி முகாம்

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான கைவினை பயிற்சி முகாம் நடந்தது.பள்ளியின் இளையோர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் சுப்ரமணி யன் வரவேற்றார். பொறுப்பாசிரியர் செந்தமிழ் செல்வன் வாழ்த்தி பேசினார்.சிறப்பு விருந்தினர் நுண்கலை ஆசிரியர் ஆனந்தராஜூ மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கலை மூலம் பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி அளித்தார். தொடர்ந்து, அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேஷ்மி, இதய வேந்தன், செந்தில்குமார், முரளிதாசன், வாழுமுனி, உமாதேவி செய்திருந்தனர். ஆசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி