உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை வெட்ட முயன்ற கணவர் கைது

மனைவியை வெட்ட முயன்ற கணவர் கைது

காரைக்கால்: மனைவியை வெட்ட முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்காரைக்கால் நெடுங்காடு காஞ்சிபுரம் கோவில்பத்து கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ்,26; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி.கணவன் ரமேஷ் ஜெயராணியிடம் அவரது வீட்டுக்கு சென்று பைக் வாங்கி வா என கூறி வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் பைக் வாங்கி வா என கூறியதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் ரமேஷ் அரிவாளை எடுத்துக்கொண்டு ஜெயராணியை வேட்ட முயன்ற போது, உறவினர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ