உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்

 தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: தமிழக முதல்வருக்கு ஆதவ் சவால்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: புதுச்சேரி போலீஸ், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது. புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. இப்படியான மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எந்த இடத்திலும் கொடுத்தது இல்லை. தமிழக முதல்வரே 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள். எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா? தவெக பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் தொடங்கிவிட்டது. த.வெ.க., தலைவர் விஜய், புதுச்சேரிக்கு ஏன் வருகிறார் என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள், நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்காக ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் நல்லது செய்ய வேண்டும் என விரும்பினார். அதேபோலத்தான் விஜயும், தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் புதுச்சேரிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என யோசனை வைத்துள்ளார். விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் பிரசார கூட்டத்தை நடத்துவோம். புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலை வாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970ல் உருவானது போல், புதுச்சேரியிலும் நல்ல முதல்வரை விஜய் உருவாக்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை