உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் ராணுவ வீரர் அலுவலகம் திறப்பு விழா 

முன்னாள் ராணுவ வீரர் அலுவலகம் திறப்பு விழா 

புதுச்சேரி: இந்திய முன்னாள் ராணுவ வீரர் லீக் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.பாக்கமுடையான்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் அலுவலக கட்டடத்தை, புதுச்சேரி முன்னாள் ராணுவ நலத்துறை இயக்குநர் மகாதேவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.விமானப்படையில் ஓய்வு பெற்று தற்போது போக்குவரத்து துறையில் துணை ஆணையராக பணியாற்றும் சந்திரகுமரன் சங்க பெயரிலான காலண்டர் வெளியிட்டு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.சங்க புதிய தலைவர் பெருமாள், மூத்த துணை தலைவராக ஜோதிக்குமார், துணை தலைவர் பரமசிவம், பொதுசெயலாளர் தேவராஜ், செயலாளர் பாலையா, மக்கள் தொடர்பு அதிகாரி தனுசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் செய்திருந்தார். செயற்குழு உறுப்பினர் துளசிதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ