உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பைகளை தரம் பிரித்து வழங்க க்யூஆர் கோடு திட்டம் துவக்கம்

குப்பைகளை தரம் பிரித்து வழங்க க்யூஆர் கோடு திட்டம் துவக்கம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை சரிபார்க்க வீடுகளில் 'க்யூஆர்' கோடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சி மற்றும் ரீசிட்டி நிறுவனம் சார்பில் 'கீப் நம்ம பாண்டி' கிளீன் திட்டத்தின் கீழ் வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்லைப்பிள்ளைசாவடி வார்டு பகுதிகளில் தினசரி குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப் படுகிறதா என்பதை சரிபார்க்க பரிசோதனை முறையில், வீடுகள் தோறும் 'க்யூஆர்' கோடு மூலம் கண்காணிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நகராட்சி சுகாதார அதிகாரி ஜெயசங்கர் துவக்கி வைத்தனர். இதன் மூலம் தினசரி குப்பைகள் வீடுகளில் சேகரிக்கப்படும் போது அதன் தரவுகள் கணினி மென்பொருள் வாயிலாக நகராட்சியால் கண்காணித்து குப்பைகள் தரம் பிரித்தலையும், சரியாக கையாளுவதையும் உறுதி செய்யப்படும். எனவே, எல்லைப் பிள்ளைசாவடியில் உள்ள பொதுமக்கள் இத்திட்டத்திற்கு முழு ஆதரவளித்து உழவர்கரை நகராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள தங்கள் பங்களிப்பை வழங்குமாறு நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு உழவர்கரை நகராட்சி பகுதி முழுதும் விரிவுபடுத்தப்படும் என, ஆணையர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ