அரிசி வழங்கும் பணி துவக்கி வைப்பு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் இலவச அரிசி வழங்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.தீபாவளி பண்டிகையொட்டி, நெட்டப்பாக்கம் தொகுதியில், இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை ரேஷன் கடை மூலம் வழங்கும் பணி நடந்து வருகிறது. மடுகரையில் துவங்கிய பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தொகுதிக்குட்பட்ட மடுகரை, மொளப்பாக்கம், சூரமங்கலம் ஆகிய பகுதி மக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணி நடந்தது.