உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்பெக்டர்கள் மோதல்

புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்பெக்டர்கள் மோதல்

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் மோதிக் கொண்ட இரு இன்ஸ்பெக்டர்கள் குறித்து போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.புதுச்சேரி கடற்கரை, டி.ஜி.பி., அலுவலகம் அருகில் புத்தாண்டு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர்கள் இருவர் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டு தாக்கி கொள்ளும் அளவுக்கு மோதல் உருவானது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீஸ்காரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.இந்த விவகாரம் போலீஸ் தலைமையகம் வரை சென்றது. புத்தாண்டு பாதுகாப்பின்போது மோதலில் ஈடுபட்ட இரு இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்