உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன்வீதி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஸ்ரீதர் நோக்கவுரையற்றினார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வு அறையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என விளக்கம் அளித்தனர்.பின்னர் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. பள்ளி விரிவுரையாளர்கள் கந்தசாமி, எட்வர்டு சார்லஸ், ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை