உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமரின் கலந்துரையாடலில் ஜிப்மர் கே.வி., பள்ளி பங்கேற்பு

பிரதமரின் கலந்துரையாடலில் ஜிப்மர் கே.வி., பள்ளி பங்கேற்பு

புதுச்சேரி : பிரதமரின் கலந்துரையாடலில் ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.ஆண்டுதோறும் பள்ளி இறுதி பொது தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கி, தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு முதல் 'தேர்வும் தெளிவும்' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் நாடு முழுதும் இருந்து 2 கோடியே 56 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர் காணொலி மூலம் பங்கேற்றனர். டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த நிகழ்வில், புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா எண்-1 பள்ளி யில் படிக்கும் மாணவ மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் காணொலி மூலமாக கலந்து கொண்டனர்.மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் நேரலை காணொலி மூலமாக மாணவர்களின் தேர்வு பயத்தினை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கையை ஊட்டினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜோஸ் மேத்யூ தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி