உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்

 ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்

புதுச்சேரி: புதுச்சேரி பிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் மஞ்சினி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்து இணையதளத்தில் தேடி வந்தார். அப்போது அவரது மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ் செய்தியுடன், ஒரு லிங்க் மற்றும் பாஸ்வேர்டு வந்தது. இதைதொடர்ந்து அவர் குறைந்த பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதில் கணிசமான லாபம் கிடைக்கவே, ரூ.30 லட்சம் செலுத்தி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பின், லாபத்தொகையை அவரது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் பேரில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை