மேலும் செய்திகள்
செல்வகணபதி எம்.பி., பொதுமக்களுக்கு வாழ்த்து
7 minutes ago
கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
10 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, புதிய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏக்கள்., நேரு, தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், அ.தி.மு.க., சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத் தலைவர் அன்பானந்தம், மாநிலத் துணைத் தலைவர் ராஜாராமன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கோமளா, மாநில கழக இணைச் செயலாளர்கள் மகாதேவி, திருநாவுக்கரசு, புதுச்சேரி நகரக் கழக செயலாளர் அன்பழகன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாநில செயலாளர் ஓம் சக்திசேகர் ,தொண்டர்களுடன் கட்சி அலுவலத்திலிருந்து ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
7 minutes ago
10 minutes ago