உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியின் பி.காம்., (சி.எஸ்.,) துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான 'மைண்ட் ஸ்பார்க் எக்ஸ்போ' நடந்தது . நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் பாபு துவக்கி வைத்தார். இதில், 10 பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றுச் சுற்றுச்சூழல் பிரச்னைகள், மனித ஆரோக்கி யத்தில் மாசுபாட்டின் தாக்கம், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாதிரி படைப்புகளை காட்சிப்படுத்தினர். தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி