உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்

சிறுமி விவகாரத்தில் மெத்தனம் நாம் தமிழர் கட்சி கண்டனம்

புதுச்சேரி, மதுவின் வருமானத்தை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் நடந்தால் அது வளர்த்தெடுப்பது சமுதாயக் குற்றங்களாக தான் இருக்கும் என நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலம் மதுச்சேரியாக மாற்றிவிட்டது. புதுச்சேரியில் தெருவுக்கு நாலு குடிப்பகங்கள் இருப்பதால் மக்கள் குடிக்கத்தான் செய்வார்.மதுவின் வருமானத்தை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் நடந்தால் அது வளர்த்தெடுப்பது சமுதாயக் குற்றங்களாக தான் இருக்கும்.அதனால் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் கொலையும் நடந்தேறியுள்ளது.இந்த ஆண்டு மகளிர் தினத்தை கருப்பு தினமாக மாற்றியமைத்து புதுச்சேரி அரசு நமக்கு பரிசளித்திருக்கின்றது.சிறுமி விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட புதுச்சேரி அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி