உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை ஸ்டாம்ப் விவகாரம் பரபரப்பு தகவல் வைரல்

போதை ஸ்டாம்ப் விவகாரம் பரபரப்பு தகவல் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ரெஸ்டோ பார்களில் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடத்தும் லாஸ்பேட்டை தாகூர் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் மகன் சசிதரன், 28, என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவரிடம் 7 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. சசிதரன் அளித்த தகவலின்பேரில், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர் சென்னை காலடிப்பேட், ஆஷிக், 23, தண்டையார்பேட்டை பொறியியல் பட்டதாரி கோபால் மகன் சந்தோஷ், 22, ஆகியோரை கைது செய்து 13 போதை ஸ்டாம்ப் பறிமுதல் செய்தனர். இருவரும் சென்னையில் வசிக்கும் கேரளா திருச்சூரை சேர்ந்த ஹசின், 22, என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்ப் வாங்கி வந்தது தெரிய வந்தது. ஹசினை கைது செய்த போலீசார், 100 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிக், தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் என்றும், அரசியல் அழுத்தம் காரணமாக அவரது கார் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை