உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் சங்கங்கள் அரசுக்கு நன்றி

செவிலியர் சங்கங்கள் அரசுக்கு நன்றி

புதுச்சேரி : புதுச்சேரி செவிலியர் நலச்சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.நலச்சங்க பொதுச்செயலாளர் ஜானகி, தலைவி சாந்தி, செயலாளர் அனுராதா ஆகியோரது அறிக்கை:சுகாதாரத்துறை அனைத்து தலைமை மருத்துவமனைகளில் செவிலிய அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருந்ததால், செவிலிய அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.காலியாக உள்ள செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என சங்கத்தின் சார்பாக வாயிற்கூட்டம், தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், காலியாக இருந்த 155 செவிலிய அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்ப தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் சேவை மேம்படும். இதற்காக புதுச்சேரி செவிலியர் நலச்சங்கம் முதல்வர் ரங்கசாமி, சுகாதார செயலர், சுகாதார இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறது.புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்க தலைவர் சுனிலா குமாரி, செயலாளர் ஹரிதாஸ் ஆகியோரது அறிக்கை:செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் மூலம் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கவர்னர் தமிழிசை சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவிலிய அதிகாரிகளின் கோரிக்கைகளை தீர்க்க உத்தரவிட்டார். அதன்படி, செவிலிய அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சுகாதார செயலர், இயக்குநர், சிறப்பு பணி அதிகாரி (சுகாதாரம்) ஆகியோருக்கு நன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ