| ADDED : மார் 11, 2024 05:40 AM
புதுச்சேரி |: புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டும் என, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் விருப்ப மனு தாக்கல் செய்தார்.லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.அதன்படி, அவரது தலைமையில் சென்னையில் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி லோக்சபா தொகுதியில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டும் என, புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்திசேகர்விருப்ப மனு தாக்கல் செய்து, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.மேலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட தாமும்விருப்பம் தெரிவித்து மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும், 15க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.மனுக்களை கொள்கை பரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருதுஅழகுராஜ் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மாசிலா குப்புசாமி, சதாசிவம், சங்கர் வெரோனிகா, அப்பாவு, வெங்கடேசன், பிரகாஷ், கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி, குப்புசாமி, மணிமேகலை, ஆஷா தம்பா, தேவா உட்பட பலர் உடனிருந்தனர்.