உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நெட்டப்பாக்கம் :' வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டம் மூலம், நெல் சாகுபடியில் மேம்படுத்தப்படட தொழில்நுட்ப பயிற்சி முகாம் கரையாம்புத்துார் கிராமத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி உழவியல் வல்லுனர் செந்தில்குமார், மண்வளம், விதை தேர்வு, விதை நேர்த்தி, உரமேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார். பூச்சியியல் வல்லுனர் சரோஜா பூச்சி மற்றும் நோய்கள் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பயிற்சி முகாமில் கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், மனமேடு, கடுவனுார் ஆகிய பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை செய்திருந்தார்.ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ